இலங்கையில் தமிழர்களுக்கு முன்னரே தெலுங்கர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக, ஆந்திர மாநில கலாச்சார நிறுவனத்தின் தலைவர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களைப் போலவே தெலுங்கு பேசும் மக்களும் பல்வேறு உலக நாடுகளில் வாழ்கிறார்கள். பர்மாவில் பர்மா நாயுடு என்ற ஒரு குழுவினர் வசிக்கிறார்கள். அதுபோல இலங்கையில் பிரிட்டிஷார் கைப்பற்றிய கடைசி பகுதி தெலுங்கு மன்னரிடம் இருந்தது என்று விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
இப்போது, அஹிகுண்டகா என்ற பழங்குடியின மக்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்யும் அவர்கள் தெலுங்கு பேசுவதாகவும் தெரியவந்துள்ளது. அந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதாகவும், அவர்கள் தீண்டாமை கொடுமைக்கு இலக்காகி இருப்பதாகவும் விஜயபாஸ்கர் கூறினார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மாநிலம் என்ற வகையில் இலங்கையில் வாழும் தெலுங்கு பேசும் மக்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.