Skip to main content

"சீமான் நாட்டை விட்டு செல்ல வேண்டும்... அதற்கான செலவை நான் ஏற்கிறேன்" - ராம ரவிக்குமார் பேச்சு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
 

gh



இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாகவும், தில்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றியும் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமாரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

எந்த இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அவர்கள் பேசவில்லை, அவர்களின் ஊதுகுழலாக இருக்கின்ற எங்கள் ஆட்களே அவ்வாறு பேசுகிறார்கள். 

யார் பேசுகிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்? 

எங்கள் அண்ணன் வேல்முருகன் பேசுகிறார், அவர்களை விட அதிகமாக பேசுகிறார். 

சீமான் தெளிவாக சொல்லியிருக்கிறார், எங்களை தாண்டித்தான் முஸ்லிம்களை தொட முடியும் என்று. குறிப்பாக நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு இதில் ஊளை வேறு இடுகிறதா என்று பேசியிருக்கிறாரே? 

அவர் முதலில் அவரை விமர்சனம் செய்யும் நடிகையின் கருத்துக்கு பதில் சொல்லட்டும்.

பொது விவகாரம் பற்றி கருத்துக்கேட்டால் அவரின் தனிப்பட்ட விவகாரத்தை பற்றி பேசுவதை எப்படி புரிந்து கொள்வது?

தனி விவகாரத்தை பொது விவகாரமாக கொண்டு வரும் போது, பொது விவகாரத்தை தனி விவகாரமாக பேசலாம், அதில் ஒன்றும் தவறில்லை. சீமான் தான் இந்திய நாட்டின் குடிமகனாக பதிவு செய்ய மாட்டேன் என்று கூறுகிறாரே, அவரை நாட்டை விட்டு போகச் சொல்லுங்கள். ஆனால் எங்கள் கைலாசாவுக்கு மட்டும் அவர் போக முடியாது.

சீமானை நாட்டை விட்டு போக சொல்வதற்கு நீங்கள் யார்?

நாங்கள் போக சொல்லவில்லை. அவர்தான் நான் போகின்றேன் என்று சொல்கிறார். வேண்டுமானால் அவரின் டிக்கெட் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அவர் கிண்டலாக சொல்லும் ஒரு கருத்துக்கு எப்படி பதில் கருத்து கூறுவீர்கள், இஸ்லாமியர்களை எங்களை தாண்டித்தான் தொடமுடியும் என்ற அவரின் கருத்துக்கு உங்களின் பதில் என்ன? 

முஸ்லிம்களுக்கு சீமான், வேல்முருகன், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் எல்லாம் பாதுகாப்பு கேடயங்கள், இவர்களுக்கு இந்துக்கள் செத்தால் தெரியாது, அதை பற்றி பேசக்கூட மாட்டார்கள். 

இந்த மூன்று கட்சிகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள், அப்படி இருக்கையில் எந்த நம்பிக்கையில் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறீர்கள்? 

இவர்கள் அனைவரும் வாடகை தலைவர்கள், முஸ்லிம்கள் அமைதியாக இருந்தாலும் அவர்களுக்காக மார்பில் அடித்துக்கொண்டு அழும் வாடகை தலைவர்கள்தான் இவர்கள். முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசக்கூடியவர்கள் வாடகை தலைவர்கள். இவர்கள் அனைவரும் வாடகை தலைவர்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.