காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் விதித்த கெடுவின் அடிப்படையில் செயல்திட்ட வரைவை மத்திய அரசு சமர்பிக்கவில்லை. பிரதமர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகா சென்று விட்டார். எனவே, கர்நாடகத் தேர்தல் முடியும் வரை அவகாசம் வேண்டுமென்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகம். நேற்று (புதன்கிழமை) மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை நடந்தது. இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் வழக்கில் கால அவகாசம் கேட்கிறார்கள். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு செய்த சட்டவிரோத துரோக நடவடிக்கையை மூடி மறப்பதற்கு கர்நாடகவில் 4 டி.எம்.சி தண்ணீர் விடுங்கன்னு ஏன் கர்நாடவை கேட்கிறார்கள். இது மத்திய அரசு நடவடிக்கையை மற்றும் துரோகத்தை மூடி மறைப்பதற்கான செயல்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு என்றைக்கு வெளியிடப்பட்டதோ அன்று முதல் காவிரி குறித்து முழு அதிகாரமும் மத்திய நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நீர் வளத்துறை ஆணையார் செயலாளருக்குதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தண்ணீரை மத்திய நீர்வளத் துணை ஆணையர்தான் திறந்து விட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் இது எல்லாம் நடக்கும். அதை அமைக்காதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது. தமிழக போராட்டங்களை திசைதிருப்புவதற்க்கான முயற்சிதான் இது.
கர்நாடக முதலமைச்சர் சொல்லுகிற கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் தான் அரசாங்கம் செயல்படுகிறது. காவிரிக்காக முதலமைச்சருக்கு தனி பொறுப்பு அளிக்கிறதா? மாநில தலைமை செயலாளர் நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்த முடியுமா? கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை வழங்குகிறதா? எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல் ஒரு கோழைத்தனமான உத்தரவுதான்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுகிற அதிகாரபூர்வ அமைப்பு மத்திய அரசின் நீர் வளத்துறை. அத்துறையின் ஆணைய செயலாளரை அழைத்து நீதிமன்றம் விசாரித்துள்ளதா? பிரதமர், அமைச்சர்கள் இவர்களை காரணம் காட்டி ஒரு அரசாங்கம் தப்பிக்க முடியுமா? அரசியல் அமைப்பு சட்டப்படி பயப்பட வேண்டிய ஐ.ஏ.ஏஸ் அதிகாரி, அவர் தன் கடமையை தவறும்போது அதிகாரி மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அவர் என்ன விளக்கம் அளித்துள்ளார். சட்டத்தில் இடம் இல்லையா? நீர் வளத்துறை ஆணையருக்கு, செயலாளருக்கு அதிகாரம் இல்லையா? நீதிமன்றம் நடவடிக்கை எல்லாம் ஒரு கண்துடைப்பாக இருக்கிறது. அரசியல் காரணங்களை ஏற்க முடியாவிட்டால் நீர் வளத்துறை செயலாளரை விசாரிக்க வேண்டும்.
பிரதமர் வாய்ப்பு அளிக்க விட்டால் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஏன் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வளவு நெருக்கடியான சூழல் வருகின்றபோது தென் மாநிலங்களை சேர்ந்த நான்கு முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கும்போது இவர் போய் ஏன் கலந்து கொண்டார். அப்ப அவர் யாருக்காக முதலமைச்சர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கால தாழ்த்தியதாக கூறி அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வந்துவிட வேண்டியது தானே. மத்திய அரசோடு சேர்ந்து உச்சநீதி மன்றம், மாநில அரசும் நாடகமடுகிறது.
மத்திய நீர்வளத்துணை ஆணையர் இதுகுறித்து விளமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும். தீர்ப்பை 8ம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள் என்றால் இது ஒரு திட்டமிட்ட நாடகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை நிறைவேற்ற மறுத்தால் இந்தியாவின் வரைப்படத்துகுள் தமிழ்நாடு இருக்கிறதா என்ற கேள்விக்குறி வந்துவிடும். ஏற்கனவே தமிழ் நாடு என்று தான் பெயர் இரு இருக்கிறது. பேருக்கு ஏற்று செயல்படும் நிலை வரும். இவ்வாறு கூறியுள்ளார்.