இந்த வருடத்தில் மிகப்பெரிய பாலிவுட் பிரபலங்களான ரன்வீர்& தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ரா& நிக் ஜோனஸ் ஆகியோரது திருமணம் நடைபெற்றது. பிரியங்கா சோப்ராவின் கணவர் ஹாலிவுட் நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பலர் எதிர்ப்பார்த்த திருமணம் என்றால் அது உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்தான். முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தி அம்பானியின் மகள் இஷா அம்பானி, இவர் தன்னுடைய சிறு வயது நண்பரான ஆனந்த பிரமல் என்பவரை வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இந்த திருமணத்திற்காக பல கோடிக்கணக்கில் செலவு செய்து உதய்பூர் அரண்மனையில் சங்கீத் நிகழ்ச்சி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த சங்கீத் நிகழ்ச்சிக்காக பல பிரபலங்கள், பல கோடிஸ்வரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்த அம்பானியின் உறவினர்களுக்காகவும், பிரபலங்களுக்காவும் உதய்பூர் நகரிலுள்ள அனைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளும் கடந்த 8-9ஆம் தேதி வரை புக் செய்யப்பட்டது. பல சார்டர்ட் ஃப்லைட்டுகளும், விடுதியில் தங்கியிருப்பவர்களை நிகழ்ச்சி நடைபெறும் உதய்விலாஸுக்கு அழைத்து செல்ல ஆயிரம் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும் இந்த விழாவை சிறப்பிக்க விருந்தினராக அழைக்கப்பட்டார்.
டிசம்பர்-8 சங்கீத் நிகழ்ச்சி முதலாம் நாள்
உதய்விலாஸ் நகரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் இணைந்து இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தை சேர்ந்த கைவினை பொருட்களை கொண்ட அங்காடியை அங்கு நிறுவியிருந்தனர். நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட அனைவரும் அந்த அங்காடிக்கு சென்று ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர். இதன் மூலம் இந்தியாவின் உயர்ந்த பாரம்பரியம் வெளிபடும் என்று இரு வீட்டாரும் தெரிவித்துள்ளனர். ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு, அந்த அந்த விடுதியிலேயே பல வகையான ஆடம்பர உணவுகள் தயார் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளன. மெனுவின் இந்தியா முதல் வெஸ்டர்ன் என்று பல ரகங்கள் இருந்துள்ளது. அன்று மதியம் உதய்விலாஸில் ஹை டீ பார்டி ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு இந்திய டிரெஸ்ஸிங்கை ஸ்டைலை வைத்துள்ளனர். பின்னர், மஹா ஆர்தி எடுக்கும் பின்னணியில் பிசோலோ ஏரியை வைத்து மிகப்பெரிய பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. அதனை அடுத்து இறவு உணவு, நட்சத்திரங்களுக்கு கீழே நடைபெற்றது. பாலிவுட் பிரபல பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியும் இரவு முழுவதும் நடைபெற்றது.
டிசம்பர்-9 சங்கீத் நிகழ்ச்சி இரண்டாம் நாள்
நிகழ்ச்சிக்கு வருகை தந்த உறவினர்களை, மேடைக்கு அழைத்து விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். பேஷன் வால்க் நிகழ்ச்சியும் உறவினர்களுக்குள் நடைபெற்றுள்ளது. ட்ரெஸ் கோடில், ஸ்மார்ட் கேசுயல்ஸ் சொல்லப்பட்டிருந்தது. மாலை பிரபலங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், சாரூக் கான், சல்மான் கான், ரன்வீர், பிரியங்கா, தீபிகா போன்ற பலர் கலந்துகொண்டு இந்த திருமண விழாவை சிறப்பித்தனர்.
டிசம்பர் 7 முதல் 10 வரை நாளுக்கு 5100 பேருக்கு மூன்று வேளையும் அன்னதாணம் போட்டுள்ளனர். அதேபோல, இந்த பார்ட்டிக்கு வந்தவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்ககூடாது என்றும், அவர்களின் சுதந்திரத்தை யாரும் பறிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களின் வெளியாகின. 12 ஆம் தேதி அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் திருமணம் நடைபெற்ற பின்னர், இந்த ஜோடி தனியாக வசிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக வொர்லி என்னும் கடலோர பகுதியில், ஐந்து அடுக்கு பங்களா ஒன்றை 450 கோடிக்கு வாங்கி, புதுப்பித்துள்ளனர்.