Skip to main content

ஏற்கனவே முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்துகள்... தற்போது அறிக்கை!!!

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 05 அன்று இறந்தார். அதைத்தொடர்ந்து அவர் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டுமென்று புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 

jayalalithaa


அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக், தன்னை அந்த சொத்தின் நிர்வாகியாக நியமிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. இதுகுறித்து தீபாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 
 

ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வருமான வரித்துறையின் துணை கமிஷனர் ஜி.ஷோபா சார்பில், துறையின் வக்கீல் ஏ.பி.ஸ்ரீனிவாஸ் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில், வருமான வரித்துறையில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள், கடன்கள் ஆகியவை குறித்த கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.  
 

அந்த அறிக்கையின்படி, சென்னை பார்ஷன் மேனர் கட்டிடத்தின் தரைத்தள கட்டிடம், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடுகள், மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள இடம், போயஸ் கார்டன் போன்றவை ஜெயலலிதாவின் அசையா சொத்துக்களாக உள்ளன. வருமான வரி பாக்கிக்காக இந்த சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
 

jayalalithaa


இவை தவிர ரூ.1 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரத்து 673 மதிப்புள்ள நிலமும், ரூ.3 கோடியே 82 லட்சத்து 28 ஆயிரத்து 817 மதிப்புள்ள கட்டிடமும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. வங்கியில், அவரது எல்லாக்கணக்கையும் சேர்த்து, 10 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 151 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவர் இறக்கையில் கையில் இருந்த ரொக்கம் ரூ.15,086. அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம், பாரம்பரிய பொருட்கள், ஓவியங்கள், சிலைகள், கலைப்பொருட்கள், படகுகள், விமானம் ஆகியவை மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம். 
 

கடந்த 2016 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.16 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரத்து 727 ஆகும். கடந்த 2016-17 கணக்கின்படி ஜெயலலிதாவுக்கு பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. அதாவது, கொடநாடு எஸ்டேட்டில் உள்ள 50 சதவீத பங்கின் மூலம் லாபமாக 1 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 130 ரூபாயும், ராயல் வேலி புளோரிடெக் நிறுவனத்தில் உள்ள 50 சதவீத பங்கு மூலம் கிடைத்த லாபத்தொகை ரூ.1 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 586ம் கிடைத்துள்ளது.
 

ஜெயா பப்ளிகேஷனின் 50 சதவீத பங்குகள் ஜெயலலிதாவிடம் உள்ளது. இதன்மூலம் ரூ. 7 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 593 லாபம் கிடைத்துள்ளது. கிரீன் டீ எஸ்டேட்டில் உள்ள 77 சதவீத பங்குகள் இவரிடம் இருக்கிறது இதன்மூலம் ரூ.12 கோடியே 70 லட்சத்து 40 ஆயிரத்து 128 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பங்குகளின் மூலம் வந்த வருவாயில் நஷ்டத்தை கழித்தபின் வரும் மொத்தம் லாபத்தின் மதிப்பு 7 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 591 ரூபாய்.
 

இந்த நிறுவனங்களின் பங்குகள் மூலம் கொடநாடு எஸ்டேட் மீதுள்ள மூலதன இருப்பு ரூ.13 கோடியே 85 லட்சத்து 57 ஆயிரத்து 763 உட்பட, 40 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 064 ரூபாய் மூலதன இருப்பாக உள்ளது. நிறுவனங்களின் பங்குகளில் உள்ள மூலதன இருப்பு மற்றும் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு என ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.56 கோடியே 41 லட்சத்து 19 ஆயிரத்து 971 என கணக்கிடப்பட்டுள்ளது.
 

கடந்த 1990-91 முதல் 2011-2012 ஆண்டுகளுக்கான ஜெயலலிதாவின் செல்வ வரி (வட்டியுடன் சேர்த்து) 2018 டிசம்பர் 31 வரை, ரூ.10 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 404 பாக்கி உள்ளது. இதேபோல் வருமான வரி பாக்கி 2019-18 டிசம்பர் 31 வரை ரூ.6 கோடியே 62 லட்சத்து 97,720 பாக்கி உள்ளது.

 

 

 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.