Skip to main content

தினகரனை முதலில் பார்த்தது நான்தான்

Published on 30/12/2017 | Edited on 30/12/2017
தினகரனை முதலில் பார்த்தது நான்தான் -சொல்கிறார் கருணாஸ்! 



முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ், திருவாடனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். 

தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது, 

முதல் முதலில் கவர்னர் மாளிகைக்கு தினகரன் கூட சென்றது நான்தான். அவரை திகார் சிறையில் போய் பார்த்த முதல் எம்எல்ஏவும் நான்தான். பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை சென்று சந்தித்த முதல் எம்எல்ஏவும் நான்தான். நான் தினகரன் ஆதரவாளர் இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். 

இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதுபோலதான் தினகரனும். உட்கட்சியில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து, மத்திய அரசினுடைய சூழ்ச்சிகளையும் எதிர்த்து ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். சோஷியல் மீடியா, ஊடங்களை மக்கள் இன்று அன்றாடம் கவனிக்கிறார்கள். அரசியல் நிகழ்வுகளை பார்க்கிறார்கள். ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து தினகரன் மீது ஆர்.கே.நகர் மக்கள் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது ஒரு தொகுதி மக்களின் மனநிலை அல்ல. இந்த மனநிலைதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையாக உள்ளது.

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், படித்தவர், ஜெயலலிதா இருக்கும்போதே பொருளாளர் பதவி வரை இருந்தவர். ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். எந்த துறை சார்ந்தும் ஞானம் உள்ளவர். எல்லா தரப்பு மக்களும் சட்டப்பேரவையில் அவருடைய செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசையும், மாநில அரசையும் எதிர்த்து தான் பேசிக்கொண்டிருக்கிறார் தினகரன். ஆகையால் மக்கள் பிரச்சனைக்காக சட்டப்பேரவையில் நிச்சயமாக அவருடைய விவாதங்கள் மக்களுக்காக தராசு போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்