Skip to main content

திராவிட கலாச்சாரமும் ஆரிய கலாச்சாரமும் – எஸ்.வி.சேகருக்கு விளக்கம்!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

 

லஞ்சம் வாங்குவதுதான் திராவிட கலாச்சாரம் என்று ஆரிய கலாச்சாரத்தில் வளர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். இவரெல்லாம் ஒரு ஆளா என்று இந்தச் செய்தியை போகிறபோக்கில் தள்ளிவிட்டு போய்விடலாம்.


 

s.v. sekar

 

ஆனால், ஆரியர்கள் யார்? அவர்களுடைய கலாச்சாரம் என்ன என்பதை வரலாற்றுபூர்வமாக அறிந்திருப்பதால் அப்படி விட்டுவிட்டு போக முடியவில்லை.

 

ஆரியர்கள் எனப்படுவோர் கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவிலிருந்து மாடு மேய்த்துக்கொண்டு வந்தவர்கள். அவர்கள் வருகைக்கு முன்னரே சிந்து சமவெளியில் திராவிடர்களுக்கு சொந்தமான அழகிய நாகரிக வாழ்க்கை இருந்தது. இதெல்லாம் வரலாறு.

 

அந்த வரலாறை திருத்தி எழுதும் ஆரியரின் முயற்சி பலமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் வாழ்ந்த மக்களை ஏமாற்றி இடம்பிடித்து, பிறகு அவர்களுக்குள் மோதலை உருவாக்கி பிளந்து வயிறு கழுவியவர்களே ஆரியர்கள் என்கிறார்கள்.

 

அவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியாது. ஆனால் உழைப்போரை ஏமாற்றி பிச்சையெடுத்து வாழத் தெரிந்தது. இதை அவர்கள் அறிவு என்று சொல்லிக் கொண்டார்கள். தங்களை ஏற்காதோரை, மற்றவர்களிடம் கோள்மூட்டி சண்டையிட்டு அழிக்கும் இழிகுணம் மிக்கவர்களாக ஆரியர்கள் இருந்தார்கள்.

 

விரிவாக நிறையச் சொல்லலாம். ஆனால், எஸ்.வி.சேகருக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் ஆரியர்கள் தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள மேற்கொண்ட தந்திரங்கள் ரொம்ப கீழ்த்தரமானவை என்பது எஸ்.வி.சேகருக்கும் தெரியும். அதை மறைக்கவே அவர் திராவிட கலாச்சாரத்தை விமர்சிக்கிறார். அவர் பேச்சிலேயே, தமிழகத்தில்தான் பார்ப்பனர்களுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறார். அதுவும் உண்மைதான், ஏனென்றால் பார்ப்பனர்களின் அடிப்படை கலாச்சாரம் என்ன என்பதை தமிழர்களுக்கு நன்கு புரிய வைக்க இங்கே தந்தை பெரியார் இருந்தார்.

 

தமிழ் மன்னர்களையும், நில உடமையாளர்களையும் அண்டிப் பிழைத்தவர்களே ஆரியர்கள். அவர்கள் வருகைக்கு பின்னரே, தமிழகத்தின் சமத்துவம் பறிபோனது. மக்களை பிரித்து, மக்களுக்கும் மன்னர்களுக்கு இருந்த நெருக்கத்தை ஒழித்தவர்கள் ஆரியர்கள்.

 

மன்னர்களை புகழ்ந்து பிச்சையெடுத்து, கடவுளுக்கு புரோக்கர்களாகி, பூஜை செய்வதற்கு காணிக்கை என்ற பேரில் பிச்சையெடுத்து, கடவுளிடமும், மன்னர்களிடமும் காரியம் சாதித்துக் கொடுப்பதாக லஞ்சம் பெற்று வாழ்க்கையை ஓட்டிய கலாச்சாரத்தை பெரியார் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

 

தன்னைத் தவிர யாரும் படித்துவிடக்கூடாது என்று விதிகளை வகுத்து, அதன்மூலம் தான்மட்டுமே அறிவாளி என்று அலப்பறை செய்த ஆரியத்தை, இடைக்காலத்தில் பவுத்தமும், சமணமும் ஒழித்த கதையையே இருட்டடிப்பு செய்தவர்கள் ஆரியர்கள். அவர்கள் இருட்டடிப்பு செய்த வரலாற்றை அறிந்தவர்கள் திராவிடர்கள். திராவிட கலாச்சாரம் என்பது யாதும் ஊரே யாவரும் உறவினர்களே என்ற பரந்த சிந்தனையை உள்ளடக்கியது.

 

ஆனால், ஆரிய கலாச்சாரமோ, மக்களை சாதியாய் பிரித்து மோதலை ஏற்படுத்தி ரத்தம் சிந்த வைத்து வேடிக்கை பார்த்தது. அதுமட்டுமின்றி, தீண்டத்தகாதவர்கள் என்று தான் வகுத்த விதிகளையே மீறி, அந்த மக்களிடம் பிச்சையெடுத்து வாழும் கீழ்த்தரமான குணம் கொண்டது என்பது திராவிடர்களுக்கு தெரியும்.

 

இதனால்தான் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு மரியாதை இல்லை என்பது எஸ்.வி.சேகருக்கு தெரியும். ஆனாலும், அந்த இழிகுணத்தை கைவிட்டு, எல்லோரும் சமம் என்ற மனப்பான்மையோடு, பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நூலையும், பாஷையையும் கைவிட அவர் சம்மதிக்க மாட்டார்.

 

கோவிலில் தீபாரதனைத் தட்டில் தீண்டத்தகாத மக்கள் போடும் பிச்சைக் காணிக்கையிலும், திருமண காரியத்திலிருந்து கருமாதி காரியம் வரை தீண்டத்தகாதவர்களிடம் பெறும் லஞ்சக் காணிக்கையிலும் ஆரியரின் கலாச்சாரம் வாழ்கிறது.

 

திராவிட கலாச்சாரமோ, அவர்களுக்கு பிச்சையும், லஞ்சமும் கொடுத்து நீடிக்கிறது. ஒருவகையில் திராவிடர்களுக்கு லஞ்சம் வாங்க கற்றுக்கொடுத்ததே ஆரியர்கள்தான் என்றுகூட சொல்லலாம்.