Skip to main content

துக்ளக் படிப்பவர்கள் அறிவாளியா... லட்சுமி படம் போட்டால் ரூபாயின் மதிப்பு உயருமா..? - பேராசிரியர் அருணன் அதிரடி பேச்சு!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பேராசிரியர் அருணன் விழா ஒன்றில் பேசும்போது, " பல்வேறு மூடநம்பிக்கைகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். இன்றைக்கு புதிதாக ஒரு மூட நம்பிக்கை முளைத்துள்ளது. அதாவது துக்ளக் படித்தால் அவர் அறிவாளி என்று கண்டுபிடித்துள்ளார்கள். இப்படி ஒரு நினைப்பு சூப்பர் ஸ்டாருக்கே இருந்தால் தமிழகத்தை நினைத்து ரொம்ப சங்கட்டமாக இருக்கிறது. நான் உண்மையிலேயே சொல்கிறேன், அவருக்கு வயதானவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள், இளைய வயதினரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். வயதானவர்கள்தான் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அனைத்து தரப்பினரும் இருக்கிறார்கள். ஆனால், தர்பார் படம் எப்படி இருக்கின்றது என்றால், தலைவர் இந்த வயசிலேயும் என்று ஆரம்பிக்கிறார்கள். அதான் வயதை சொல்லியாயிற்றே என்றால் மீண்டும் தலைவர் இந்த வயதிலேயேயும் என்று இழுக்கிறார்கள். படத்தில் கதை இல்லை, ஆனால் அவரின் இந்த உத்வேகம் இளைஞர்களில் சிலருக்கு பிடித்துள்ளது. என்னுடைய பயம் எல்லாம், அந்த ரசிக மனோபாவம் இந்த மூட நம்பிக்கையை உள்வாங்கினால் என்ன ஆவது என்றுதான்.  இதைபற்றி நாம் யோசிக்கிறோம். ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு போகிறார் என்று இதை எளிதாக விட்டுவிட முடியாது. 
 

fg



துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என்றால் அதனை எப்படி எளிதாக கடந்து போக முடியும். அதையும் தாண்டி அந்த விழாவில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் பேசுகிறார், சோ துக்ளக் பத்திக்கையை ஆரம்பித்த பிறகு தான் இடையில் நின்று போய் இருந்த அலகு குத்துதல் போன்ற பழக்க வழக்கங்கள் மீண்டும் தோன்றின என்று கூறுகிறார். அதாவது இடையில் தடைபட்டு இருந்த மூட நம்பிக்கை பழக்க வழக்கங்கள் சோ வந்த பிறகுதான் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது என்ற பொருளில் அவர் பேசியுள்ளார். அதற்கு பிறகு ரஜினி வந்து என்ன பேசுகிறார் என்றால் அந்த பத்திரிக்கை வைத்திருப்பவன் தான் அறிவாளி என்று. இதில் எவ்வளவு பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இவர்கள் எத்தகைய செய்திகளை விதைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுப்பிரமணிய சுவாமி ரூபாய் நோட்டுகளில் லெட்சுமி படம் போட்டால் ரூபாயின் மதிப்பு உயரும் என்று சொல்லியிருக்கிறார். நிச்சயம் அவர் துக்ளக் படித்து இருப்பார். லெட்சுமி விலாஸ் வங்கியே நட்டத்தில் ஓடிகிட்டு இருக்குனு சொல்றாங்க. இவர்களுக்கு எல்லாம் இந்த மாதிரியான எண்ணங்களை துக்ளக் பத்தரிக்கை தான் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் எவ்வளவு பெரிய உள்நோக்கம் இருக்கிறது என்றால் தேச பிதா காந்தியின் உருவப்படத்தை எடுக்க வேண்டும் என்ற கொடூர எண்ணம் இருப்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.