Skip to main content

"‘மாநாடு’ பட பாடலை ஏன் அவங்கள பாட வச்சேன்னு கேட்கறாங்க" - யுவன் ருசிகரம்!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

bfhssfbs

 

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து ‘மாநாடு’ படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது. 

 

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டார். அதில்... “வெங்கட் பிரபு படத்துல வேலை பார்க்குறது ஸ்பெஷல்தான். தற்போது வெளியாகி இருக்குற ’மெஹெரசைலா’ பாடலில் ஏன் பவதாரணியை பாட வச்சேன்னு கேட்கறாங்க. கொடுக்கலேன்னா சண்டைக்கு வருவாங்களே” என ஜாலியாக கலாய்த்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த U1!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

பரக

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். அதில், "  மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும்,  இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று , "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் யுவனின் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது யுவன் ஆக்கரமித்துள்ளதாக அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். 

 

 

Next Story

"யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு.." - அண்ணாமலை தடாலடி

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

jk


'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இன்று காலை, "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு இடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை , " யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடன் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவரை விட நான் கருப்பு. அவர் சாதாக் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இது தொடர்பான கேள்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்" என்றார்.