ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற தலைப்பில் படமாகிறது. கிரீடம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் தான் இப்படத்தை இயக்குகிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சினிமா, அரசியல் என்று பல்வேறு கட்டங்கள் இருப்பதால், ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு தோற்றங்களில் வருகிறார்.
இந்த எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன. அந்த வகையில் தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர் காதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆரிடம் படக்குழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது.
அதேபோல ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்து, அருகில் இருப்பவர் சசிகலா. அவருடைய கதாபாத்திரத்தை தவிர்த்துவிட்டு ஜெயலலிதாவின் பயோபிக்கே எடுக்க முடியாது. அதேபோல இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், சசிகலாவாக நடிப்பவருக்கும் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
அந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டுக்கு சென்றபின் பிரியாமணிக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தன. சமீபத்தில்தான் ‘பேமிளி மேன்’ என்கிற ஹிந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தார். அந்த தொடரில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது.