Skip to main content

“உட்கார சொன்னேன். ஆனால் அவர்”- விஜய் குறித்து விவேக் ட்வீட்

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

மூன்றாவது முறையாக அட்லியும் விஜய்யும் இணைந்து பணி புரியும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 

vivek

 

 

இதில் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து விஜய் படத்தில் மூன்றாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார்.
 

இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணிக்கு பிகில் படத்திலிருந்து ஒரு முக்கியமான அப்டேட் விடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்திருந்தார். மேலும் அந்த அப்டேடானது படத்தின் டீஸர் பற்றியோ, ட்ரைலர், ஆடியோ வெளியிடும் தேதி பற்றியோ இல்லை. அனைவரும் எதிர்பார்த்த வேறு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன் முதலாக விஜய் பாடுகிறார் என்றும், இதுதான் முதல் பாடல், தலைப்பு வெறித்தனம் என்றும் தெரிவித்தார். அப்போது பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அட்லி, விஜய் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் அனைவரும் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகின. அதில் விவேக் நாற்காலியில் அமர, விஜய் நின்றுக்கொண்டிருப்பார். இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிடும்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார் விவேக். அதில், “நான் விஜய்யை உட்கார சொன்னேன். ஆனால், அவர் உட்கார மாட்டேன் என்று சொல்லிவிட்டார். என்னுடைய உயரத்தாலும், கேமரா பிரேம் அட்ஜஸ்மெண்டிற்காக நாற்காலியில் உட்கார வேண்டியதாகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்