Published on 30/04/2020 | Edited on 30/04/2020
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்துக் கொண்டு மக்களுக்கு வீடியோ மற்றும் சமூகவலைதள பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் சமீபத்தில் தொடர்ந்துகொண்டே போகும் ஊரடங்கு குறித்து பேசினார்.
இந்நிலையில் ட்விட்டரில் இருந்து வரும் மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் அறிவித்துள்ளார். அவ்வப்போது ட்விட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் விவேக், சமீபமாக கரோனா பாதிப்பு குறித்து ஒருசில விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒருசில தனிப்பட்ட காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். விவேக்கின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.