Skip to main content

விஸ்வாசம் ஷூட்டிங் முடிஞ்சாச்சி...!! புது கெட்டப்புடன் அஜித் (படங்கள்)

Published on 10/11/2018 | Edited on 10/11/2018

 

 

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பூனேவில் நடந்துவந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் நேற்று நள்ளிரவில் அறிவித்துள்ளனர். மேலும் மீசை, தாடியை முழுமையாக வழிக்கப்பட்ட அஜித்தின் புதிய தோற்றத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்