Skip to main content

ரஜினியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் ! 

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
vishnuvishal

 

சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து மீண்டும் சக்ஸஸ் ரூட்டிற்கு திரும்பியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் தன் மனைவி ரஜினியுடன் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக தற்போது அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....

 

 

 

உங்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நானும் ரஜினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தோம். இப்பொழுது எங்கள் இருவருக்கும் சட்டபூர்வமாக விவாகரத்து நிகழ்ந்துவிட்டது. எங்களுக்கு ஒரு அழகிய மகன் இருக்கிறான். அவனை வளர்ப்பதில் இருவரும் இணைந்து இருப்போம். அவனுக்கு தேவையானதை சிறப்பாக செய்வோம். நாங்கள் இருவரும் அழகான சில ஆண்டுகளை ஒன்றாகக் கழித்துள்ளோம். எப்போதும் நண்பர்களாக தொடர்வோம். ஒருவருக்கொருவர் மதிப்பளிப்போம். எங்கள் குடும்பத்தையும், குழந்தையையும் கருத்தில் கொண்டு எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்