நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், விஷால் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “முதல்ல என்னை மன்னிச்சிடுங்க அண்ணா. இந்த நேரத்தில் உங்க பக்கத்துல நின்னு, முகத்தை பார்த்து உங்க காலை தொட்டு கும்புட்டிருக்கனும். ஆனால் நான் வெளிநாட்டிலிருந்த்தது தப்பு தான். என்னை மன்னிச்சுடுங்க. நல்லது செய்றது சாதரணமான விஷயம் அல்ல. அதை உங்ககிட்டருந்து நான் கத்துகிட்டதுணே. உங்க அலுவலகத்தில், யாராவது பசியோடு வந்தா சோறு போட்டு அனுப்புவீங்கன்னு 20 வருஷம் முன்னாடி நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை தான் நானும் செய்யனும்னு நினைக்கிறேன். நீங்க எவ்ளோ உதவி பண்ணியிருக்கீங்க. இந்த சமுதாயத்திற்கு. நீங்க அரசியல் வாதியோ, நடிகர் சங்க முன்னாள் தலைவரோ அல்ல. நல்ல மனிதர். அவர் இழந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நடிகர் சங்கத்துக்கு நீங்க செஞ்ச உதவி, நடத்தின நிர்வாகம், அரசியல் வாதியா துணிவா பேசின விஷயம் செயல்பாடு... நடிகனா இவ்வ்ளோ பெயர் வாங்கியிருக்கீங்க. ஆனால் ஒரு மனிதரா பேர் வாங்குவது சாதரணமான விஷயம் இல்லை. நீண்ட நாட்கள் அவரின் பேர் நீடிக்கும்” என்றார்.
💔 pic.twitter.com/rNvze992tk— Vishal (@VishalKOfficial) December 28, 2023