Skip to main content

"இது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்" - விஷால் வேதனை!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
gree

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு மற்றும் பொங்கலன்று வெளியான ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவரின் தாயார் ஜெயலட்சுமி மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 62.  தாயார் ஜெயலட்சுமிக்கு நேற்று ஜனவரி 15 காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலை 11 மணியளவில் காலமானார். இவரின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன் அவர்களது தாயார் ஜெயலட்சுமி அவர்கள் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கும், அவரது சகோதரர் தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது தாயார் ஆன்மா சாந்தி அடையும் வேண்டிக்கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்