Published on 07/11/2018 | Edited on 07/11/2018
நடிகர் விக்ரம் தற்போது 'தூங்காவனம்' பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. வித்தியாசமான தோற்றத்தில் வெள்ளை தாடியுடன் விக்ரம் இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ என தலைப்பு வைக்கப்பட்ட இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வரும் நிலையில் 'கடாரம் கொண்டான்' படக்குழுவினருடன் சேர்ந்து கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இதுவும் வைரலாகி வருகிறது. விக்ரமின் 56வது படமாக உருவாகும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.