Skip to main content

விஜய் சேதுபதியை கௌரவித்த அமீரகம்

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

vijay sethupathi has been granted golden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி,அமலா பால் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் நடிகை த்ரிஷா, மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகை மீனாவுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்