Published on 02/01/2021 | Edited on 02/01/2021

நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'முகிழ்'. விஜய் சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ரெஜினா கெசண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மணி நேர கால அளவு கொண்ட இப்படம் இணையத்தில் மட்டும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.