Skip to main content

“பல வருட கனவு” - நன்றி தெரிவித்த கவின்

Published on 26/04/2025 | Edited on 26/04/2025
kavin thanked to anirudh regards kiss movie

தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின் கைவசம் கிஸ், மாஸ்க் மற்றும் நயன்தாராவுடன் இன்னும் பெயரிடாதப் படம் என மூன்று படங்களை வைத்துள்ளார். இதில் கிஸ் படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மாஸ்க் படம் படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறது. நயன்தாரா படம் குறித்த எந்த அப்டேட்டும் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் கிஸ் படம் குறித்த ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கியிருக்க ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கிறார். கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்க பட பணிகள் 2023ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. ஜென் மார்டின் இசையமைக்கும் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகவுள்ளது.  

முதல் பாடல் வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு ப்ரொமோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். ஒரு துள்ளலான காதல் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. 

முதல் பாடல் ப்ரொமோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கவின், “பல வருட கனவு. நன்றி அனிருத் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் முதலில் அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு பின்பு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்