‘அமெரிக்கா'ஸ் காட் டேலண்ட்’ என்ற பிரபல நிகழ்ச்சியின் ஸ்பின் ஆஃப் நிகழ்ச்சியான, ‘அமெரிக்கா'ஸ் காட் டேலண்ட்: பேண்டஸி லீக்’ என்ற ரியாலிட்டி ஷோ, கடந்த 1 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், மும்பையை சேர்ந்த வி.அன்பீட்டபிள் (V.Unbeatable) நடனக்குழு பங்கேற்றது.
இதில் விஜய் ஆண்டனி இசையமைத்த ‘நாக்க மூக்க...’ பாடலுக்கு வி.அன்பீட்டபிள் நடனக்குழு நடனம் ஆடி அசத்தியுள்ளது. அவர்களின் நடனம் அங்குள்ள நடுவர் உட்பட அரங்கிலிருந்த பார்வையாளர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பி.வி பிரசாத் இயக்கத்தில் நகுல், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இப்படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க...’பாடல் வெளியான சமயத்திலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
OMG @vijayantony #NaakuMukha song in the #AGT2024 @AGT by the dance performance from #VUnbeatable group. pic.twitter.com/P0yprrZMJ9— Peter Atom (@peteratomm) January 4, 2024