Skip to main content

திருமணம் குறித்து தமன் கூறிய கருத்து; வலுக்கும் எதிர்ப்பு

Published on 21/02/2025 | Edited on 21/02/2025
Thaman  says no one should marry as girls want to be independent

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் தமன், தமிழில் ஆதி நடிக்கும் சப்தம், சஞ்சய் ஜேசன் இயக்கும் படம், அதர்வா நடிக்கும் இதயம் முரளி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ள தமன் திருமணம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியது, “இப்போது, எல்லோரும் திருமணம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. பெண்களும் வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்க விரும்புவதால் இது கடினமாகிவிட்டது. அவர்கள் யாருக்கும் கீழ் இருக்க விரும்பவில்லை. எனவே, நாம் அந்த மாதிரியான ஒரு பெண் சமூகத்தை இழந்துவிட்டோம்.

கொரோனாவிற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. அதில் இன்ஸ்டாகிராம் முக்கிய குற்றவாளிகளில் ஒன்றாக இருக்கிறது. நான் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேனா என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நாம் இங்கு அழகான விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் சிரமத்தை பகிர்வதில்லை.

இப்போது திருமணம் செய்து கொள்ள் நான் யாருக்கும் பரிந்துரை செய்ய மாட்டேன். அதன் தரநிலைகளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. மக்கள் ஈஸியாக விவாகரத்து பெறுகிறார்கள். அது ரொம்ப சாதாரணமாக மாறிவிட்டது. யாரும் அட்ஜெஸ்ட் செய்ய விரும்புவதில்லை” என்றார். இவரது கருத்துக்கு எதிராக தற்போது சமூக வலைதளங்களில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். தமன், பாடகி ஸ்ரீ வர்தினையை திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 30 வருடங்களுக்கு மேல் அவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்