Skip to main content

நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் சிம்ரன் - மீனா

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
 simran and meena to act in ajith in good bad ugly movie

அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு பைக்  பயணத்தில் ஈடுப்பட்டார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் குட், பேட், அக்லி என்ற தலைப்பில் உருவாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. பொங்கல் 2025ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் சிம்ரன் மற்றும் மீனா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கெனவே அஜித்துடன் தலா மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிம்ரனனை பொறுத்தவரை அவள் வருவாளா, வாலி, உன்னைக் கொடு என்னை தருவேன் உள்ளிட்ட படங்களிலும் மீனாவை பொறுத்தவரை ஆனந்த பூங்காற்றே, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட படங்களிலும் அஜித்துடன் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து குட், பேட், அக்லி படத்தில் இருவரும் நடிப்பதாக வந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் நான்காவது முறையாக அஜித்துடன் இருவரும் இணைந்து நடிப்பார்கள். 

சார்ந்த செய்திகள்