Published on 25/05/2020 | Edited on 25/05/2020
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துகின்றனர். குடியரசுத்தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து சமூகவலைத்தளத்தில் ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில்...
''கரோனாவால் இன்று
பசியுற்றுப் பசையற்றுக் கிடக்கும்
சர்வதேச சமூகம் அறியும்
ஈகையின் பெருமை என்னவென்று.
ஈகையை வாழ்க்கைச் சட்டமாக்கிய
மார்க்கத்தைப் பின்பற்றும்
உலக இஸ்லாமிய சமூகத்துக்கு
உளம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்''
எனப் பதிவிட்டுள்ளார்.