தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வாத்தி படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.