பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..
“உஸ்பெகிஸ்தான் நாட்டில் தான் ராங்கி படப்பிடிப்பு முழுவதும் நடத்தினோம். அங்கே வேலைகள் எல்லாமே ரொம்ப தாமதமாகத்தான் ஆரம்பிப்பார்கள். காலை 7 மணிக்கு எல்லோரும் கூடுவதற்கு திட்டமிட்டால் 10 மணிக்குத்தான் கூடுவார்கள்.
எங்களோட மொழி அவர்களுக்குப் புரியல. அவங்க பேசுறது எங்களுக்குப் புரியல. எப்படியோ சமாளித்து படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். முதன்முறையாக அந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்துகிறோம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு போனால் அங்கே படப்பிடிப்பு நடத்துவது சுலபம். ஏனெனில், அவர்கள் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்ததைப் பார்த்திருப்பார்கள்; பழகியிருப்பார்கள். ஆனால், உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பு நடத்துவது என்பது ரொம்பவே கடினமாக இருந்தது.
இராணுவத்தை மையமிட்ட கதை என்பதால் திரைப்படத்தில் எல்லாமே உண்மையான பொருட்களாக இருக்கவேண்டும் என மெனக்கெட்ட இயக்குநர் இராணுவத் தளவாடங்கள் எல்லாம் உண்மையாகவே இராணுவத்திடமிருந்து வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.” என்று பேசினார்.