Skip to main content

த்ரிஷா தொடர்ந்த வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
trisha house issue case

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா தனது படப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பன், அவரது வீட்டின் கட்டுமானத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் த்ரிஷா, தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அந்த பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது த்ரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பிலும் மெய்யப்பன் தரப்பிலும் மதில் சுவர் விவகாரம் தொடர்பாக சமரசமாகப் பேசி முடிக்கப்பட்டு விட்டது, அதனால் மேற்கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தற்போது த்ரிஷா தொடர்ந்த வழக்கை முடித்துவைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் த்ரிஷா செலுத்திய கட்டண தொகை அவருக்கு திருப்பி கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்