கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான தென்மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு உட்பட பலரும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திரை பிரபலம் டி.ராஜேந்தர் தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழு பார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து இருக்கையில் உட்காரவைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து சரிப்படுத்தினர். இருப்பினும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.