Skip to main content

'துணிவு' பட அப்டேட் கொடுத்த மஞ்சு வாரியர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

thunivu update given by manju waarier

 

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. 

 

மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப் பாடியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. 

 

இந்நிலையில் 'துணிவு' படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "ஜிப்ரான் இசையில் பாடியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. துணிவு படத்தில் மிகவும் சுவாரஸ்யமான பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோசம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மஞ்சு வாரியர், நடிப்பது மட்டுமல்லாமல் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களைப் பாடியுள்ள இவர் தமிழில் 'சென்டி மீட்டர்' படத்தில் இடம்பெற்ற 'கிம் கிம்' பாடல் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'துணிவு' படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்