
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்கவும், மேலும் 8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில், நேற்று மாலை திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.