Skip to main content

நீண்டு கொண்டே போகும் ஸ்ட்ரைக்...தீர்வு காண பட அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை  

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
theater


திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்றும் பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் சிறிய படங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் பட அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும் பார்க்கிங் கட்டணத்தையும் கேன்டீன்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலையை குறைக்கவும் வலியுறுத்தி 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழந்து இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பட அதிபர்கள் நேரில் சந்தித்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கி உள்ளனர். மேலும் டைரக்டர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு கான தற்போது தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்கள் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் பட அதிபர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஓரிரு நாளில் மீண்டும் சந்தித்து பேச மீண்டும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வேலை நிறுத்தம் கைவிடப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்... முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! 

Published on 05/04/2018 | Edited on 06/04/2018
theater


கடந்த 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக கோட்டைக்கு ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக விஷால் அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடெங்கும் காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடப்பதால் கோட்டைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜுவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.உடன் பெப்சி தலைவர் செல்வமணி, தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உதவ வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். பிறகு இது குறித்து  அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியபோது... "அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். திரைப் பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என்று உறுதி அளித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய விஷால்...."திரை உலகினர் பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ராஜு உறுதி அளித்துள்ளார். மேலும்  இதன்மூலம் எங்கள் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

Next Story

பட அதிபர்கள் ஸ்ட்ரைக்....தெலுங்கு படங்களுக்கும் சிக்கல்

Published on 04/04/2018 | Edited on 05/04/2018
theater


திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருவதால் திரையரங்குகளிலும் புதிய படங்கள்  எதுவும் வெளியாகாமல் பழைய படங்களையே திரையிட்டு வருகின்றனர். இதையடுத்து தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் மட்டுமே அவ்வபோது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இனி தெலுங்கு படங்களும் தமிழ்நாட்டில் ஓடாத காரணத்தினால், சமீபத்தில் இங்கு வெளிவந்து நல்ல வசூல் பார்த்து வரும், ரங்கஸ்தலம், சல் மோகன் ரங்கா, எம் எல் ஏ ஆகிய படங்களுக்கு வசூல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.