கடந்த வருடம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வெளியான பின்பு அனைவரும் தானோஸை பற்றி பேசாமல் இல்லை. மீம்ஸ் தொடங்கி வீடியோக்கள் வரை தானோஸ் என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. உலகையே காப்பாற்றிய அவெஞ்சர்ஸ் டீமையே அடித்து நொறுக்கினால் யார்தான் தானோஸை பற்றி பேசாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட தானோஸிடம் இருந்து உலகை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்பதுதான் அவெஞ்சர்ஸ் எண்ட கேம் படத்தின் கதை.
உலகில் பலரும் இன்றைய நாளை எதிர்பார்த்து காத்திருந்திருப்பார்கள். இன்றுதான் அவெஞ்சர்ஸ் டீம் தானோஸை அழிக்கிறார்களா? இல்லை மீண்டும் தோல்வியை தழுவுகிறார்களா? என்கிற கேள்விகளுக்கு விடை தெரியும் நாள். பலரும் எதிர்பார்த்த எண்ட் கேம் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாலிவுட் படமாக இருந்தாலும், அனைத்து மொழி பேசும் மக்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் இப்படத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவவில் ஒரு சாதனை படைத்திருக்கிறது. இந்திய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இன்று இப்படத்திற்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு அவெஞ்சர்ஸ் டிக்கெட் ஹவுஸ் புல் ஆகியுள்ளது.
google ın yaptığı küçük bir süpriz#eastereggs #Thanos pic.twitter.com/XpNV4eYC7H
— PL4TINUM (@PlatinBae) April 26, 2019
உலகம் முழுவதும் பெரிய வசூலை வாரிக்குவிக்க வேண்டும் என்று மார்வெல் தயாரிப்பு நிறுவனம் நினைத்திருக்கிறது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று வேற லெவலுக்கு புரோமோஷனில் இறங்கியது. புரோமோஷனிற்காக அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியை பேச வைத்திருக்கிறது. இப்படி பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் கூகுளில் தானோஸை வைத்து ஒரு புரோமோஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அது என்ன என்றால், கூகுளில் தானோஸ் என்று தேடினால், தனோஸின் காண்ட்லெட் கையுறை வருகிறது. அந்த கையுறையை க்ளிக் செய்தால் கூகுளில் வரும் அனைத்து டேட்டாக்களும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் அழிவதுபோல அழிகிறது. இதனை அடுத்து மீண்டும் அந்த கையுறையை க்ளிக் செய்தால் அழிந்துபோன டேட்டாக்கள் அனைத்தும் மீண்டும் வருகிறது. இந்த புரோமோஷன் ட்விட்டரில் செம வைரலாகி வருகிறது.