விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும் வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.
இதுவரை இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக நிலையில், தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தயாரிப்பாளர் லலித் இப்படத்தை தயாரிக்க இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப்பயிற்சியாளராக அன்பறிவ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். திரைக்கதை மற்றும் வசனப் பணிகளை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து கவனிக்கின்றனர். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனத் தெரிவித்த படக்குழு கடந்த 2 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த அப்டேட் வெளியாகும் எனச் சொன்னதிலிருந்தே ஆவலுடன் இருந்தார்கள். மேலும், விக்ரம் பட டைட்டில் டீசரை போலவே இந்த படத்துக்கும் இருக்கும் எனவும் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கதாநாயகி அப்டேட் எனப் புதிதாக இருக்கும் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால், ஏற்கனவே கசிந்த தகவல்களே படக்குழுவின் அறிவிப்பாக வெளியான நிலையில், புதிதாக எதுவும் இல்லாததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023