Skip to main content

தலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

இயக்குனர் ஏ.எல். விஜய் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். 
 

kangana ranaut

 

 

இந்நிலையில் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த படத்தின் எழுத்தாளர் அஜயன் பலாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கடுப்பான எழுத்தாளர் தனது ஃபேஸ்புக்கில் இயக்குனரை சாடியது உடனே சர்ச்சையானது. 

அதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடர்புக்கொண்டு பதிவை நீக்க சொன்னதால் அதை நீக்கிவிட்டார். மேலும் அவர்களக்குள் இருக்கும் பிரச்சனை பேசி தீர்க்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்திருப்பதாக அஜயன் பாலா தெரிவித்திருனார்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக தெரிவித்து, இன்று ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று இரவு நண்பரும் இயக்குனருமான விஜய் இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குனரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார். சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தைக் காண்பித்தார். 

இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணுவுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை மூலம் சம்பளப் பிரச்சினைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக.இதழியல் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்