Published on 18/10/2019 | Edited on 18/10/2019
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான தொடக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தல 60 படத்தின் பூஜை திடீரென போடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு வலிமை என்று பெயரிட்டுள்ளது படக்குழு. நேர்கொண்ட பார்வை படத்தில் பணிபுரிந்த அதே தொழில்நுட்ப கலைஞர்கள்தான் இப்படத்திலும் பணிபுரிகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.