Skip to main content

“தற்போதைய தேவை இதுதான்”- கரோனா பரவல் குறித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 

mahesh babu

 

 

உலகளவில் உட்சநட்சத்திரங்களாக இருப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களும் பாதிக்கப்பட்டு பலர் பீதியில் இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை பிரபலங்கள் தங்களால் முடிந்தவரை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுதான் தற்போதைய தேவை. கடினமான முடிவுதான். ஆனால், அதை எடுக்க வேண்டும். சமூக வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். இந்த நேரத்தை உங்களுக்குப் பிடித்தவர்களுடன், உங்கள் குடும்பத்துடன் செலவிடுங்கள். இது இந்தக் கிருமி பரவாமல் தடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றும்.

உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை, சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சானிடைஸர்களை அதிகம் பயன்படுத்துங்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தால் மட்டும் முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள். இந்தத் தொற்று காணாமல் போகும் வரை நாம் தேவையான வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். நாம் அனைவரும் இதில் சேர்ந்து இருக்கிறோம். இதை இணைந்தே எதிர்கொள்வோம். அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19ஐ தோற்கடிப்போம். பாதுகாப்புடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்