Skip to main content

"20-25 நிமிடங்களுக்கும் களம் மாறிக்கொண்டே இருக்கும்" - சிரோ பட இயக்குநர்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

tamil cinema new movie update

 

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 'வெப்பன்' திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக 'சிரோ' படத்தை உருவாக்கி வருகிறார். முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இந்த ஃபேன்டசி படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படம் மூலம் பிரார்த்தனா சாப்ரியா அறிமுகமாகிறார். விவேக் ராஜாராம் கூறும்போது, ​​“நான் மன்சூர் சாருக்கும் அப்துல் சாருக்கும் ஸ்கிரிப்டை சொன்னபோது, ​​இருவருமே தனித்துவமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டனர். இந்த படத்தின் மூலம் தனது மகள் பிரார்த்தனாவை நடிகையாக அறிமுகம் செய்ய வைத்த மீனா சாப்ரியா மேடமுக்கும் எனது நன்றிகள்.

 

பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற காம்ப்ளக்ஸ் சப்ஜெக்ட்டை படம் கொண்டுள்ளது. படம் ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் வராது. ஒவ்வொரு 20-25 நிமிடங்களுக்கும் களம் மாறிக்கொண்டே இருக்கும். பெண்கள் அடிப்படையிலேயே மிகப்பெரிய சக்தியைக் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை இந்தப் படம் மூலம் முன்வைக்க முயற்சி செய்துள்ளேன்" என்றார். 

 

மேலும் படத்தின் தலைப்பு பற்றி அவர் கூறும்போது, ​​“சிரோ ஒரு கற்பனையான கதாபாத்திரம் - பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை. நான் முதன்முறையாக பிரார்த்தனாவைச் சந்தித்தபோது, ​​அவர் இந்த கதாபாத்திரத்திற்கு வலுவாக நியாயம் செய்வார் என்று உணர்ந்தேன். மேலும், அவரது தாயார் அவரை இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்