தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜேந்தர், நாட்டில் இருக்கும் சூழலில் ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு போடாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆனால் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் " என தெரிவித்தார்.
இதனையடுத்து அஜித் சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு " நடிகர் சிம்பு மும்பையில் விளம்பர படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை வாக்களிக்க வரவழைக்க முயற்சி செய்தும் வர முடியாமல் போனது. இதே போன்று நடிகர் அஜித் வாக்களிக்க வராததற்கு காரணம் கரோனா. இல்லையென்றால் இத்தனை தேர்தலுக்கு வாக்களிக்க வந்தவர் இப்போது வராமல் இருப்பாரா நாட்டுல சூழ்நிலை சரியில்ல சார் . பொங்கலுக்கு வர வேண்டிய வலிமை படம் வெளியாகவில்லை. எல்லாத்துக்கும் கரோனா தான் காரணம் என தெரிவித்துள்ளார்.