இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் பிராங்க் புகழ் ஆர்.ஜே. சரித்திரன் நடிப்பில் வெளியான குறும்படம் 'ஸ்வீட் பிரியாணி'. உணவு டெலிவரி பாயின் ஒருநாளை அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் பேசியிருந்த 'ஸ்வீட் பிரியாணி' குறும்படத்தில், சென்னை பெருநகரத்தில் படிந்துள்ள சாதிய ஆதிக்க மனநிலையையும் இயக்குநர் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இந்தக் குறும்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றதோடு, சர்வதேச அரங்கில் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில் ஸ்வீட் பிரியாணி குறும்படம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் இந்திய திரைப்பட விழா, மெல்போர்ன் 2022-ல் திரையிட தேர்வாகியுள்ளது. இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய 'டூ லெட்' திரைப்படமும் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Very happy to share that the short film "Sweet Biriyani" has been selected at the prestigious Indian Film Festival of Melbourne, IFFM 2022. Congratulations to my student @Hashmi_JH.It is noteworthy that his previous short film #Tolet "Best Indian Film" award at the 2018 edition pic.twitter.com/RxFdyoTAAu— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) July 30, 2022