லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட சில நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதே போல் சமீபத்தில் கேரள மாநிலத்திலும் இந்த சாதனையை 'விக்ரம்' படம் நிகழ்த்தியுள்ளது. இதனிடையே 'விக்ரம்' படத்தின் மேக்கிங் வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் 'விக்ரம்' படம் குறித்து கே.ஜி.எஃப் இயக்குநர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விக்ரம் படக்குழுவிவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோரை ஒன்றாக பார்ப்பது விருந்தாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் உங்களின் பணிகளுக்கு நான் எப்போதும் ரசிகன். அனிருத் நீங்கள் ஒரு ராக்ஸ்டார். அன்பறிவு மாஸ்டர்களை நினைத்து பெருமையாக உள்ளது. இவர்கள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள். ரோலக்ஸ் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. சூர்யா சார் நீங்க சூப்பர்" என குறிப்பிட்டுள்ளார். சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Still can't get over #Rolex. @Suriya_offl sir you were just💥— Prashanth Neel (@prashanth_neel) July 11, 2022