கடந்த ஆண்டு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்து பிரபலமான சுஜா வருணி கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து தற்போது 'வாடீல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக முன்னர் தகவல் வெளியானது. பின்னர் அதை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. அப்போது இதுகுறித்து விளக்கமளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருவருக்கும் வரும் நவம்பர் 19ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை சுஜா வருணி இதுகுறித்து பேசியபோது..."எனக்கும் சிவகுமார் என்பவருக்கும் வரும் நவம்பரில் திருமணம் நடைபெறவுள்ளது. சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள நான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். சிவாஜி தேவ் தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.