Skip to main content

மீண்டும் போராட்டத்தில் குதித்த 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி !

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
sri reddy

 

 

 

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சில காலம் அமைதி காத்த இவர் சமீபத்தில் நடிகர் நானி மீது பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

 

 

இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கும், நானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தன் மேல் பொய் புகார் கூறுவதாக ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தார். இந்நிலையில் ஏற்கனவே ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்திருந்தது. பின்னர் மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை உடனே நீக்கப்பட்டது. இதனால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை ஸ்ரீரெட்டிக்கு விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் தெலுங்கு நடிகர் சங்கம் இவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தினால் தற்போது ஸ்ரீரெட்டி மீண்டும் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்துள்ளார். இதனால் தெலுங்கு படவுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.