சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் 'என்னுடைய வாயை மூட வைப்பதற்கு ரூ.10 கோடி பேரம் பேசினார்கள். பிரபலங்களை அனுப்பி சமாதானம் செய்தார்கள்' என்று உண்மையை போட்டு உடைத்தார். இதையடுத்து நடிகை ஜீவிதா ஸ்ரீரெட்டியின் செயல்களை கண்டிக்கும் வகையில் பேசியதற்கு, நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் ராஜசேகருக்கு அவருடைய மனைவி ஜீவிதாவே பெண்களை அனுப்பி வைத்ததாக சமூக ஆர்வலர் சந்தியா தெரிவித்தற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. விரைவில் வெளியிடுவேன் என்று எச்சரித்தார். இந்நிலையில், காஷ்மீர் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில்... "செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்தான் இதுபோன்று சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள். எனவே, அரசாங்கம் சிவப்பு விளக்கு பகுதிகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் கற்பழிப்பு கொலைகள் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.
Published on 23/04/2018 | Edited on 26/04/2018