
சென்ற ஆண்டு 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பாடகி சுச்சித்ராவின் ட்விட்டரில் நடிகர், நடிகைகளின் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதை தடை செய்யும்படி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதே போல் தெலுங்கில் ‘ஸ்ரீ லீக்ஸ்’ என்ற பெயரில் பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியாகி தெலுங்கு நடிகர்களை அதிர வைத்துள்ளது. இதில் ஒருவரது படத்தை வெளியிட்டு, பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நாசம் செய்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடப்போவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்து உள்ளார். மேலும் ஆதாரத்துடன் நடிகர்கள் படங்கள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டியுடன் தெலுங்கு நடிகர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தெரியாமல் நெருக்கமாக இருந்த படங்களை ஸ்ரீ ரெட்டி வீடியோவில் படம்பிடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்து மோசம் செய்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் முகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி பகிரங்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது முன்னணி தெலுங்கு நடிகர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து ஸ்ரீ லீக்சில் தங்கள் படங்கள் வெளியாகாமல் தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அரசியல் பிரமுகர்களை வைத்து நடிகை ஸ்ரீரெட்டியை அவர்கள் மிரட்டுவதாகவும் பேரம் பேசுவதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் வேகமாக பரவி வருகிறது.