Skip to main content

ப்ளீஸ்..! அறிக்கை போர்கள் வேண்டாம்..! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வேண்டுகோள்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020
dshg

 

கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், இதன் காரணாமாக திரையுலகம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராகவுள்ள படங்களை ஓ.டி.டி. தளங்கள் நேரடி ரிலீசுக்கு கைப்பற்றி வருகின்றன. அந்தவகையில்  'பொன்மகள் வந்தாள்' மற்றும் 'பென்குயின்' ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைமில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டால் திரையங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கடும்  நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... 


"ஓடிடி (டிஜிட்டல்) வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு இரண்டும் வெவ்வேறு வழிகள். ஒருவேளை யாராவது இதற்கு கவலைப்படவேண்டுமென்றால் அது திரையரங்கம் சாராதவர்களாகத்தான் இருக்க வேண்டும். திரையரங்கங்களுக்கான ஒரே மூலதனம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமே. மேலும் இந்த இரு தரப்பும் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருக்கவேண்டியவர்கள். எனவே அறிக்கை போர்களுக்குப் பதிலாக இந்த தொற்றுநோயிலிருந்து தப்பிக்க முயற்சிப்போம்!'' என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்