இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள் என இசைத்துறையில் வரலாறு படைத்துள்ளார்.
அவர் மறைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் தற்போது சிலை வைக்கப்பட்டுள்ளது. கோணேட்டம் பேட்டை கிராமத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவுகளை போற்றும் வகையில், இந்த சிலையை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர். 4 அடி உயரம் கொண்ட இந்த சிலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மார்பளவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் கலந்து கொள்ள நடந்தது. பின்பு பொதுமக்கள் பலரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.