
நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் வெற்றிக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும், 'சிவா மனசுல சக்தி' புகழ் ராஜேஷ் எம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான் கவனிக்கிறார். இப்படத்தில் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படம் குறித்து ஆலோசிப்பதற்காக சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் இருவரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை நேற்று சந்தித்தனர். அப்போது முன்று பேரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.