இன்றைய தலைமுறை சினிமாவில் சொல்லிக்கொள்ளும் படி உச்சத்தை அடைந்தவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலத்தில் முற்றிலும் பொழுதுபோக்கான படங்களில் மட்டும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த அவர் தற்போது சமூக அக்கறை கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் சமூக கருத்துக்களோடு வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என சமூக அக்கறையோடு அறிவித்திருந்தார் சிவா. இந்நிலையில், தற்போது இதே போல் சமூக அக்கறை கொண்ட இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்..."முன்பு டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். ஆனால், இப்போது தான் அதன் கொடிய தாக்கம் எனக்கு புரிகிறது. போதும்... இனி என் படங்களில் இந்த மாதிரி எந்த காட்சியும் இருக்காது. என் இயக்குனர்களும் இனி இதுபோன்ற காட்சிகளை எனக்கு மட்டும் அல்ல, வேறு படங்களுக்கும் வைக்க மாட்டார்கள்" என்று உறுதிபட அறிவித்துள்ளார்.
Published on 02/04/2018 | Edited on 03/04/2018