Published on 10/11/2018 | Edited on 10/11/2018
சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக 'இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் இப்படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி கசிந்துள்ளது. இது முழுக்க முழுக்க மாஸான அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் எனவும் தகவல் கசிந்துள்ளது.