Skip to main content

ராஜாவாக மாறிய சிம்பு 

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
simbu

 

 

 

சிம்பு தற்போது 'அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கிகொண்டிருக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் கேத்ரின் தெரசா, யோகிபாபு, மகத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கு வந்தா ராஜாவாதான் வருவேன்’ என பெயரிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்!

Published on 01/02/2019 | Edited on 01/02/2019
simbu milk


நடிகர் சிம்புவின்  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’படம் இன்று வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு என் கட்டவுட்டுக்கு பால் ஊற்ற வேண்டாம். அதற்கு பதிலாக பெற்றோருக்கு நல்ல உடை வாங்கி தாருங்கள் என்றார். 
 

அதனை அடுத்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில், எனக்கு இருக்கிற ஒன்னு இரண்டு ரசிகர்கள் அண்டாவில் பால் ஊற்றுங்கள் என்றார். இந்த இரண்டு வீடியோக்களால் ரசிகர்கள் குழம்பியிருக்க பிறகு சிம்பு அதற்கு விளக்கம் தந்தார். அதில், நான் எனக்கு பால் ஊற்ற சொல்லவில்லை, படம் பார்க்க வருபவர்களுக்கு பால் கொடுங்கள் என்று சொன்னார். யாரும் எனக்கு இதுபோல பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துகொண்டார்.
 

இந்நிலையில், இன்று வெளியான இந்த படத்திற்கு வந்த ரசிகர்கள்  ஒரு சில இடங்களில் சிம்பு பேச்சை மீறியும் கட்டவுட்டில் பால் ஊற்றினார்கள். இதேபோல ஒரு சில இடங்களில் சிம்பு சொன்னதுபோன்று அண்டாவில் பால் கொண்டுவந்து பொதுமக்களுக்கு தந்திருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.

 


 

Next Story

'அண்டாவுல தான் ஊத்த சொன்னேன்...என் மேல இல்லை' - சிம்பு திடீர் பல்டி !

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
simbu

 

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு 'கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் 'இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு எனக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள்' என ரசிகர்களுக்கு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சிம்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்...

 

 

"கடந்த ஒரு வருடத்திற்கு முன் என்னுடைய ரசிகர் ஒருவர் கட்அவுட் இறந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணாமாக நான் என் படத்திற்கு கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள் என எனக்கெதிராக விமர்சனங்கள் வந்தது. அதனால் நான் கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என கிண்டலாக சொன்னேன். நான் இப்படி சொன்னது யார் மனதையாவது புண் படும்படியாக இருந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என நினைக்கலாம். நான் மாற்றி பேசவில்லை அனைவரும் மாற வேண்டும் என்று தான் பேசுகிறேன்" என்றார்.